×

சொந்த காலில் நிற்க முயற்சி; 351 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து 351 ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடைவிதித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்காமல், அவற்றை உள்நாட்டிலேயே சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக உள்நாட்டு தொழிற் நிறுவனங்களை ஊக்கப்படுத்தியும் வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்கள், உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கும் படிப்படியாக தடை விதித்து வருகிறது.  இதன் அடிப்படையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3வது முறையாக 351 வகையான ராணுவ உதிரி பாகங்கள், தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. ‘இந்த தடை உத்தரவு அடுத்தாண்டு டிசம்பரில் தொடங்கி, முறையான கால இடைவெளியில் அமல்படுத்தப்படும். இறக்குமதி செய்யப்பட்டு வந்த இந்த 351 பொருட்களும் அடுத்த மூன்றாண்டுகளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். முதல் கட்டமாக, 172 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு டிசம்பரில் நடைமுறைக்கு வரும். 2023 டிசம்பரில் மேலும் 89 தளவாடங்களுக்கு தடை அமலுக்கு வரும். மேலும், 90 தளவாடங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் 2024 டிசம்பருக்குள் அமலுக்கு வரும்,’ என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.* ‘போக்குவரத்து விமானங்கள், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல் ஏவுகணைகள் போன்ற 101 ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் இறக்குமதியை 2024க்குள் இந்தியா நிறுத்தும்,’ என்று கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது….

The post சொந்த காலில் நிற்க முயற்சி; 351 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ministry of Defense ,New Delhi ,Union Defense Ministry ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...